அன்பான வேண்டுகோள்

அ) மாநாட்டில் கட்டுரை படைக்க விரும்புவோர் விதிகள்

கீழ்கண்ட பொருண்மைகளில் அந்தந்த நாட்டிற்கேற்ப கட்டுரைகளை எழுதி அனுப்ப வேண்டும். கட்டுரைகள் ஒருங்குறி எழுத்துருவில் (Unicode) 12 புள்ளியில் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும். கட்டுரைகள் 1800 முதல் 2000 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். அதற்குமேல் உள்ள கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா. கட்டுரைகளைத் தேர்வுசெய்ய அமைக்கப்படும் கட்டுரைத் தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் மட்டுமே மாநாட்டில் படைக்க அனுமதி வழங்கப்படும். அவர்களுக்கு மட்டுமே இடவசதி, உணவு போன்ற சலுகைகள் வழங்கப்படும். அவர்கள் சொந்தச் செலவில் சென்னை வந்துசெல்ல வேண்டும்.

ஒவ்வொரு கட்டுரையாளருக்கும் தங்கள் கட்டுரையைப் படிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும். அதற்குள் அவர்கள் தங்கள் கட்டுரைகளைப் படித்து முடித்து விடவேண்டும். நேரக்கட்டுப்பாடு மிக, மிகக் கண்டிப்பாகப் பின்பற்றப்படும். படவில்லைகள் (Power Point Slides) பயன்படுத்த விரும்புவோர் கட்டுரை அனுப்பும்பொழுதே அதுபற்றித் தெரிவிக்க வேண்டும். அவர்கள் தங்கள் சொந்த மடிக்கணினியைக் கொண்டுவர வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்படும். மாநாட்டுக் கட்டுரைகள் wtwc2conferencepapers@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 30.04.2017 ஆம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும். அதற்குப் பிறகு வரும் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா. காலம், கருத்து அடிப்படையில் கருத்தரங்கில் வாசிக்கத் தெரிவு செய்ய முடியாவிட்டாலும் தரமிக்க கட்டுரைகள் கட்டுரைக்கோவையில் இடம் பெற வாய்ப்புண்டு தேர்வு செய்யப்பட்ட கட்டுரையாளர்களுக்கு 30.04.2017க்குள் தகவல் தெரிவிக்கப்படும்.

பொ௫ண்மைகள்

அ) எங்கள் நாட்டுத் தமிழர்களின் வாழ்வும் வரலாறும் 1 (இலங்கை, சிங்கப்பூர், மலேசியா)

ஆ) எங்கள் நாட்டுத் தமிழர்களின் வாழ்வும் வரலாறும் 2 (ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ்)

இ) எங்கள் நாட்டுத் தமிழர்களின் வாழ்வும் வரலாறும் 3 (அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி)

ஈ) எங்கள் நாட்டுத் தமிழ் இலக்கியத்தில் மண்ணும் மரபும் 1 (இலங்கை, சிங்கப்பூர், மலேசியா)

உ) எங்கள் நாட்டுத் தமிழ் இலக்கியத்தில் மண்ணும் மரபும் 2 (ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ்)

ஊ) எங்கள் நாட்டுத் தமிழ் இலக்கியத்தில் மண்ணும் மரபும் 3 (அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி)

எ) எங்கள் நாட்டில் தமிழ்மொழி - இலக்கியத்தில் தேடலும் கோடலும் 1 (மொரீஷியஸ்,மியான்மா், தென்னாப்பிாிக்கா)

ஏ) எங்கள் நாட்டில் தமிழ்மொழி - இலக்கியத்தில் தேடலும் கோடலும் 2 (பிஜித்தீவுகள், ரீயூனியன் தீவுகள், அரபுநாடுகள், சீனா, ஐரோப்பா(பிரான்ஸ், ஜெர்மனி தவிர்த்து) இவற்றில் ஏதாவது 3 நாடுகள்)

ஐ) மின் தமிழ் இலக்கியத்தின் தற்போதைய நோக்கும் போக்கும் (பொது)

இந்திய அமர்வுகளின் தலைப்பு

இந்தியத் தமிழ் இலக்கியங்கள்

இ) மாநாட்டு மலருக்கான கட்டுரைகள்

மாநாட்டு மலருக்கு மேற்கண்ட பொருண்மைகளிலோ வேறு தலைப்புகளிலோ கட்டுரைகளை அனுப்பிவைக்கலாம். மலருக்கான கட்டுரைகளும் அதேஅளவுதான் இருக்க வேண்டும். (1800 முதல் 2000 வார்த்தைகளுக்குள்). மலருக்கான கட்டுரைகளை 30.04.2017ஆம் தேதிக்குள் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் திரு. ப. முத்துக்குமாரசுவாமி அவர்களின் pmkschennai@gmail.com மின்னஞ்சலுக்கும், செயலாளர் திரு. மு. சிதம்பரபாரதி அவர்களின் mu.chidambarabhaarathy@gmail.com மின்னஞ்சலுக்கும் அனுப்பி வைக்கவேண்டும்.

மாநாட்டு மலரில் தாய்த் தமிழகத்து எழுத்தாளரும் பங்குபெறவேண்டி அவர்களும் மேற்கண்ட பொருண்மைகளில் கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம். அதனுடன் பதிவுக்கட்டணமாக ரூ.500 செலுத்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நிறைவுவிழா அன்று மாநாட்டுமலர் அன்பளிப்பாக வழங்கப்படும்.

ஈ) மாநாட்டுப்பதிவு

வெளிநாட்டுப் பேராளர்கள் www.wtwc2.com எனும் இணையதளத்திற்குச் சென்று Delegates Registration Form – Overseas படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திசெய்து, கட்டணத்தைச் செலுத்தியபின் wtwc2overseas@gmail.com அனுப்ப வேண்டும். அதேபோல் இந்தியர் பேராளர்கள் www.wtwc2.com எனும் இணைய தளத்திற்குச் சென்று delegates Registration Form – India படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திசெய்து, கட்டணத்தைச் செலுத்தியபின் wtwc2india@gmail.com அனுப்பவேண்டும். படிவமும் கட்டணுமும் 30 ஏப்ரல் 2017ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

உ) முகநூல் முகவரி

இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு தொடர்பான செய்திகள் அனைத்தும் 2nd world tamil writers conference என்ற முகநூல் முகவரியில் பார்த்து மகிழுங்கள். கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம்


(அ) பேராளர்களாகப் பதிவு செய்ய இறுதி நாள் : 30.04.2017

(ஆ) பேராளர் பதிவுக் கட்டணம்:

1. வெளிநாட்டுப் பேராளர்களுக்கு அமெரிக்கன் டாலர் 100 (தங்குமிடம் இல்லை)
2. வெளிநாட்டுப் பேராளர்களுக்கு அமெரிக்கன் டாலர் 300 ( தங்குமிட வசதியுடன்)
3. பதிவு செய்ய : wtwc2overseas@gmail.com
4. இந்திய நாட்டுப் பேராளர்களுக்கு : ரூபாய் 3000 மட்டும் (தங்குமிடம் இல்லை)
5. பதிவு செய்ய : wtwc2india@gmail.com
(மேற்கண்ட கட்டணங்கள் சென்னையில் மாற்றத் தகுந்த வகையில்)
WORLD TAMIL WRITERS CONFERENCE என்ற பெயரில் CITY UNION BANK,Medavakkam Branch, Current Account No. 510909010059558 IFSC Code: CIUB0000305, Micr Code: 600054045, Branch Code-000305 Address:9959, Tambaram-Velachery Main Road, Medavakkam, Chennai-600 100. Contact Cell Phone No. +91 99803 51760 என்ற வங்கிக் கணக்கில் செலுத்திட அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பேராளர்கள் வசதி கருதி மற்றுமொரு வங்கிக் கணக்கு Axis Bank ல் துவங்க உள்ளோம். அதன் கணக்கு எண் விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். உணவு வசதி : பங்கு பெறுகின்ற அனைவருக்கும் 09.06.2017 ஆம் தேதி காலை முதல் 11.06.2017 ஆம் தேதி இரவு வரை, காலை உணவு – இடைவேளை சிற்றுண்டி, தேநீர் மதியம் – இரவு முடிய சைவ – அசைவ உணவு வழங்கப்படும்.

பரிசுப்பொருள்கள் (பேராளர்களுக்கு மட்டும்)

1. தரமிக்க செய்நேர்த்தியுள்ள தோல்பை ஒன்று
2. 600 பக்கங்கள் அளவில் மாநாட்டு மலர்
3. மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு
4. 2011ல் சிங்கப்பூரில் நடந்த முதலாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு
5. திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்
6. கண்கவர் திருவள்ளுவர் உ௫வச்சிலை
7. குறிப்புப் புத்தகம், இரண்டு பேனாக்கள்
8. மாநாட்டு இலச்சினை பொறித்த இரண்டு கைத்துண்டுகள்.
9. கடவுச் சீட்டு, முகவரி அட்டை, வங்கி அட்டைகள் வைத்துக்கொள்ளும் சிறிய தோல்பை

மாநாட்டுஆய்வுக்கட்டுரைத்தலைப்புகள் Download Katturaittalaippukal

அ) புலம்பெயர்ச்சியின் காரணங்களும் புதிய இட வாழ்வியல் நிகழ்வுகளும்

ஆ) மின் மற்றும் அச்சு ஊடகங்கள் நல்ல தமிழைப் பயன்படுத்த ஆற்றும் பணிகள்

இ) பயிலாதாரையும் எளிதாய்ச் சென்றடையும் பழமொழிகளின் ஆழ அகலங்கள்

ஈ) தமிழ் சார்ந்த அயலக வணிகமும், கடல்சார் வணிகமும்

உ) இன்றைய நவநாகரிக உலகில் தமிழுக்குரிய இடம்

ஊ) மின்தமிழ்ப் பயன்பாடுகளும் தமிழ் இலக்கிய வளர்ச்சியும்

எ) அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ் மொழியின் பங்களிப்பு

ஏ) புலம்பெயர் தமிழர்களின் கவின்கலை, பண்பாட்டு வளர்ச்சி

ஐ) புலம்பெயர் இலக்கியமும் மொழிபெயர்ப்புகளும்

ஒ) புலம்பெயர் இலங்கியங்கள் அந்தந்த நாட்டு மக்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கம்

மாநாட்டுமலருக்கானகட்டுரைத்தலைப்புகள்

1. பொருளியல் கோட்பாடுகளும் திருக்குறளும்

2. திருக்குறள் கோட்பாடுகளும் நாட்டு நிர்மாணமும்

3. கணினிப் பயன்பாட்டில் தமிழும் இணையத்தளமும்

4. ஊடகவியலில் தமிழுக்கான உணர்வும் ஊக்கமும்

5. அந்தந்த நாட்டுத் தமிழ்க் கவிதையின் புதிய போக்குகள்

6. அந்தந்த நாட்டுச் சிறுகதையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள்

7. அந்தந்த நாட்டுத் தமிழ் நாவல்களில் புதிய அணுகுமுறைகள்

8. மொழிபெயர்ப்பு நோக்கில் தமிழ்ப் படைப்புகள்

9. பிறமொழிகளில் சங்க இலங்கியங்கள்

10. தொல்காப்பியரும் மேல்நாட்டு இலக்கியக் கோட்பாடுகளும்

11. அந்தந்த நாட்டுச் சிறுவர் இலக்கியங்களில் மொழியின் பயன்பாடு

12. பிறமொழி இலக்கிய, இலக்கணங்களில் தமிழின் செல்வாக்கு

13. அந்தந்த நாட்டுத் தமிழ் இதழ்களில் தமிழ் நடையின் புதிய போக்கு

14. அகராதிக் கலையில் ஐரோப்பியர்களின் பங்கு

15. அந்தந்த நாட்டுத் தமிழ்ப் படைப்புகளில் பெண்ணியம் – ஒரு பார்வை

16. அறநூல்கள் வழி அறியும் அறக்கோட்பாடுகள்

17. அந்தந்த நாட்டுப் படைப்பிலக்கியங்களில் விளிம்புநிலை மாந்தர்கள்

18. துறைதோறும் கலைச் சொல்லாக்கத்தின் வளர்ச்சி

19. பூஜாங் பள்ளத்தாக்கு முதல் கம்போடியா வரை தமிழர் நாகரிகம்

20. அயலக வாணிபத்தால் வளர்ந்த தமிழும் பண்பாடும்

21. தமிழ் இலங்க்கியங்களில் புலம்பெயர்தல் நேற்றும் இன்றும்

22. தொலைந்துபோன கதைசொல்லிகளும், தமிழ் மரபும்

23. பேச்சுத் தமிழில் வலம் வரும் அழகிய ஊர்வலம்

24. வீட்டுக்கு உள்ளேயும் – வெளியேயும் தமிழ்